வல்வில் ஓரி திருவிழா கொண்டாடுவோருக்கு அண்ணாமலை வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வல்வில் ஓரி திருவிழா கொண்டாடுவோருக்கு அண்ணாமலை வாழ்த்து

வல்வில் ஓரி திருவிழா கொண்டாடுவோருக்கு அண்ணாமலை வாழ்த்து

வி த லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த பதிவில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் தொன்மையான இலக்கியங்களில் போற்றப்பட்ட மன்னரான வல்வில் ஓரி, 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வீரவேந்தர் என குறிப்பிட்டுள்ளார். அவரின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மேலும், வல்வில் ஓரி சிறந்த கொடையாளியும் ஒப்பற்ற வீரருமாக திகழ்ந்தவர் என்றும், அவரது வாழ்க்கை தமிழர்களின் வீரம் மற்றும் அறநெறிக்கான சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகளை தன்னகத்தே கொண்டிருந்த வல்வில் ஓரியின் புகழ் காலம் கடந்தும் நிலைத்திருக்கும் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.