வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தா - நயினார் நாகேந்திரன் வாழ்த்து..!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தா - நயினார் நாகேந்திரன் வாழ்த்து..!

வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தா - நயினார் நாகேந்திரன் வாழ்த்து..!

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் (Grand Chess Tour) தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அந்த பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ள சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரக்ஞானந்தா தனது அபார திறமை, தொடர் முயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் உலக சதுரங்க அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த பிரக்ஞானந்தாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், அவரது வெற்றி தமிழ்நாட்டின் பெருமையாகவும், சாதனை இந்தியாவின் பெருமையாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்காலத்திலும் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி, உலக அளவில் இந்தியாவின் புகழை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.