வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா..?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா..?

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா..?

மாதத்தின் முதல் நாளையொட்டி சமையல் கியாஸ் சிலிண்டர்களின் புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு பயன்பாட்டுக்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன.சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. குறிப்பாக, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றியமைக்கப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.10.50 அதிகரித்துள்ளது. இதனால், அந்த சிலிண்டர் தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது., 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அது தொடர்ந்து ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.