வாட்ஸ் அப்பில் அறிமுகம் ஆகும் புதிய வசதி: அடிக்கடி ஸ்டேடஸ் வைப்பவர்களுக்கு குட் நியூஸ்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

01 Aug 2026 www.thinathulir.com

வாட்ஸ் அப்பில் அறிமுகம் ஆகும் புதிய வசதி: அடிக்கடி ஸ்டேடஸ் வைப்பவர்களுக்கு குட் நியூஸ்

வாட்ஸ் அப்பில் அறிமுகம் ஆகும் புதிய வசதி: அடிக்கடி ஸ்டேடஸ் வைப்பவர்களுக்கு குட் நியூஸ்

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் திகழ்கிறது. நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருடன் உரையாடுவதற்கு மட்டுமல்லாமல், ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட முக்கிய கோப்புகளை பகிர்வதற்கும் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அலுவலக பணிகள், வணிக தொடர்புகள், பள்ளி மற்றும் கல்லூரி குழுக்கள், வாடிக்கையாளர் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அன்றாட தேவைகளிலும் வாட்ஸ் அப் முக்கிய பங்காற்றி வருகிறது.இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், போட்டி நிறைந்த சந்தையில் தனது முன்னிலையை தக்கவைத்துக்கொள்வதற்கும், மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வரிசையில், வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட பிறகு அதன் கேப்ஷனை 15 நிமிடங்களுக்குள் மாற்றிக் கொள்ளும் புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வந்தால், சிறிய தவறுகளைச் சரிசெய்ய ஸ்டேட்டஸை நீக்கி மீண்டும் பதிவேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இந்த புதிய வசதி விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.