வடகிழக்குப் பருவமழை: சென்னையில் ரூ.21.80 கோடியில் சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வடகிழக்குப் பருவமழை: சென்னையில் ரூ.21.80 கோடியில் சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

வடகிழக்குப் பருவமழை: சென்னையில் ரூ.21.80 கோடியில் சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் ரூ.21.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, பேருந்துகள் செல்லும் பிரதான சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்க ரூ.9.25 கோடியும், உட்புறச் சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய ரூ.12.55 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கான்கிரீட் மற்றும் தார் கலவைகளைப் பயன்படுத்தி மொத்தம் ரூ.21.80 கோடி செலவில் சீரமைப்புப் பணிகள் (Road Patch Works) நடைபெற்று வருகின்றன. இதுவரை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சேர்த்து 4,691 சாலைப் பள்ளங்கள் கான்கிரீட் மற்றும் தார் கலவைகளைக் கொண்டு மூடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளிலும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.