வடகிழக்கு பருவமழை 20-ந்தேதிக்குள் தொடங்க வாய்ப்பு..!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வடகிழக்கு பருவமழை 20-ந்தேதிக்குள் தொடங்க வாய்ப்பு..!

வடகிழக்கு பருவமழை 20-ந்தேதிக்குள் தொடங்க வாய்ப்பு..!

தென்மேற்கு பருவமழை தற்போது படிப்படியாக விலகி வரும் நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 20-ந்தேதிக்குள் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறியதாவது: நாடு முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவைவிட 13 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பருவமழை 20 சதவீதம் குறைந்துள்ளது. சில மாவட்டங்களில் இயல்பைவிட 10 முதல் 15 சதவீதம் வரை குறைவாக மழை பெய்துள்ளது. அதே நேரத்தில், சில மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமான மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு எல் நினோ தாக்கம் காரணமாக வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அதன்பின்னர் வடகிழக்கு காற்று வீசத் தொடங்கும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ந்தேதிக்குள் தொடங்கும். அதேபோல், இந்த ஆண்டும் அந்த காலகட்டத்தில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இதற்கான சாதகமான வானிலை நிலவரங்கள் தற்போது உருவாகி வருகின்றன. மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடிய சூழலும் ஏற்படலாம். எனவே, கனமழை மற்றும் அதிகனமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து மேற்கொள்வது அவசியம். வடகிழக்கு பருவமழை குறித்த வானிலை கணிப்புகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை ஜனவரி 15-ந்தேதி வரை நீடித்து வருகிறது. இந்த ஆண்டும் அதேபோன்று மழைப்பொழிவு நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதற்கிடையில், இன்னும் 10 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.