வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
17 Jul 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 17 Jul 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, ஜூலை 17: தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடல் முதல் லட்சத்தீவு வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தின் சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஜூலை 19 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை தொடரும் எனவும், பிற பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 17 முதல் 21 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. எனினும், உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயல்பான வெப்பநிலை நீடிக்கும்.மேலும், கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வெப்ப அசௌகரியம் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னை நகரைப் பொறுத்தவரை, இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37–38°C, குறைந்தபட்ச வெப்பநிலை 28–29°Cவரை பதிவாகக்கூடும்.