வசூலில் அசுர வேட்டை... ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை பின்னுக்கு தள்ளிய ஸ்பைடர்மேன்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

வசூலில் அசுர வேட்டை... ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை பின்னுக்கு தள்ளிய ஸ்பைடர்மேன்

வசூலில் அசுர வேட்டை... ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை பின்னுக்கு தள்ளிய ஸ்பைடர்மேன்

‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 937 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இதுவரை அதிக வசூல் செய்த படமாக இருந்த ‘ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ படத்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனையை படைத்துள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் கடந்த ஜூலை 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்வெல் நிறுவனத்தின் 38-வது திரைப்படமாகவும், ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படத் தொடரின் நான்காவது பாகமாகவும் இப்படம் வெளியாகியுள்ளது. புதிய வில்லன்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் காரணமாக படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இப்படம் புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ‘ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ திரைப்படம் சுமார் 936 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ 937 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ படத்தின் சாதனையை முறியடித்து, வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ முன்னேறியுள்ளது. இரு திரைப்படங்களின் வசூலுக்கும் இடையே சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்பைடர்மேன்’ படத்தின் இந்த புதிய வசூல் சாதனை ஹாலிவுட் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.