வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25-ல் இருந்து 5.5 சதவீதமாக உயர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25-ல் இருந்து 5.5 சதவீதமாக உயர்வு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25-ல் இருந்து 5.5 சதவீதமாக உயர்வு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ‘ரெப்போ ரேட்’ எனப்படுகிறது. இந்த விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கான வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தும். அந்த வகையில், இம்முறைக்கான கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் ரெப்போ ரேட்டை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தால் பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, பருவமழை நிலவரமும் நிச்சயமற்றதாக உள்ளது. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை உயர்த்தியுள்ளது.