வக்கீல்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: கோவா சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

02 Sep 2026 www.thinathulir.com

வக்கீல்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: கோவா சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

வக்கீல்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: கோவா சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

வக்கீல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களைத் தாக்கினால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் மசோதா கோவா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள வக்கீல்கள் மீது தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் கோவா வக்கீல்கள் பாதுகாப்பு மசோதா-2026 சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி, பணியில் இருக்கும் வக்கீலைத் தாக்கும் நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். அதேவேளை, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பொய்யான அல்லது உள்நோக்கத்துடன் புகார் அளிப்பவர்களுக்கும் தண்டனை வழங்கும் நடைமுறை இடம்பெற்றுள்ளது. இதன்படி, அத்தகைய நபருக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.வக்கீல்கள் தங்களது தொழில்முறை பணிகளை மேற்கொள்ளும்போது வன்முறை, மிரட்டல், துன்புறுத்தல், பொய் வழக்குகளில் சிக்கவைத்தல், சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுபோன்ற செயல்கள் சட்டத் தொழிலின் சுதந்திரத்தையும், வக்கீல்கள் அச்சமின்றி பணியாற்றும் சூழலையும் பாதிக்கக்கூடும். மேலும், இதன் தாக்கம் வழக்குகளைத் தொடரும் நபர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் நீதியைப் பெறும் உரிமையிலும் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து குற்றங்களும் காவல்துறை வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடிய ‘காக்னிசபிள்’ குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீதிமன்றங்கள் வசூலிக்கும் அபராதத் தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட வக்கீல்களுக்கு இழப்பீடு வழங்கவும் மசோதாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சட்டம் மற்றும் நீதித்துறையை கவனித்து வரும் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் இந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார். வக்கீல்களுக்கு எதிரான குற்றங்களையும், அவர்களின் சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பையும் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.இந்த மசோதா அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது.