லண்டன் கார் பந்தயம்: அஜித் குமார் அணி 3-வது இடம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

13 Sep 2026 www.thinathulir.com

லண்டன் கார் பந்தயம்: அஜித் குமார் அணி 3-வது இடம்

லண்டன் கார் பந்தயம்: அஜித் குமார் அணி 3-வது இடம்

லண்டனில் நடைபெற்ற லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில், நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் இடம்பெற்ற அணி 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரிட்டன் சென்றுள்ள முதல்-அமைச்சர் விஜய், அஜித் குமார் பங்கேற்ற இந்த கார் பந்தயத்தை இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கி வைத்தார். அஜித்தின் அழைப்பின் பேரில் பந்தய களத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய், அவரை சந்தித்து ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து நடைபெற்ற போட்டி இரவு 11.47 மணிக்கு நிறைவடைந்தது. 5.1 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் மொத்தம் 50 லேப்கள் இடம்பெற்றன. 44 கார்கள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் ஏ.என்.எஸ். மோட்டார்ஸ்போர்ட் அணி முதலிடத்தை கைப்பற்றியது. ஆர்.ஏஸ்.ஜி.பி அணி 2-வது இடத்தை பிடித்தது. டீம் விராஜ் சார்பில் களமிறங்கிய அஜித் குமார் அணி 3-வது இடத்தை பெற்றது. பந்தயம் தொடங்கியபோது 16-வது இடத்தில் இருந்த அஜித் அணி, பின்னர் படிப்படியாக முன்னேறி 3-வது இடத்தை எட்டியது. இதன் மூலம் அந்த அணி குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்துள்ளது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் அஜித் குமார் ஓட்டிய கார் சீராக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விபத்தில் சிக்கியது. கார் பந்தயப் பாதையை விட்டு விலகி பக்கவாட்டில் சென்றது. இதையடுத்து மீட்புக் குழுவினர் உடனடியாக செயல்பட்டு காரை சீரமைத்தனர். அதன் பின்னர் அஜித் அணி தொடர்ந்து போட்டியில் பங்கேற்று 3-வது இடத்தைப் பிடித்தது.