லோகேஷ் கனகராஜ் தயாரித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

லோகேஷ் கனகராஜ் தயாரித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் தயாரித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘மிஸ்டர் பாரத்’ என்ற புதிய படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். நிரஞ்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ‘கட்சி சேர’ பாடல் மூலம் கவனம் பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், முதலில் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் டிசம்பர் 11-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், தற்போது ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சிறிது நேரத்திலேயே இந்த டிரெய்லர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.