ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக வரும் அரிசி மூட்டைகள்: பணியாளர்கள் வேதனை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
19 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 19 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக வரும் அரிசி மூட்டைகள்: பணியாளர்கள் வேதனை

ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக வரும் அரிசி மூட்டைகள்: பணியாளர்கள் வேதனை

தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகளில் நிர்ணயிக்கப்பட்ட எடை இருப்பதில்லை என கடை பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு உரிய அளவில் அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுகுறித்து பணியாளர்களிடம் கேட்கும்போது, தங்களுக்கே அரிசி மூட்டைகள் எடை குறைவாக வந்து சேர்வதாகவும், அவ்வாறு இருக்கும்போது பொதுமக்களுக்கு முழு எடையில் எப்படி அரிசி வழங்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் நெல் அரவை ஆலைகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, முறைகேட்டுக்கு காரணமான அரசு அதிகாரிகள் சிலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.50 கிலோ எடை கொண்டதாகக் கூறப்படும் அரிசி மூட்டைகளில் எடை குறைவு இருப்பது ஒருபுறம் என்றால், அவற்றின் தரம் குறித்தும் புகார்கள் எழுந்துள்ளன. தரமான அரிசி வெளிச்சந்தைக்கு அனுப்பப்பட்டு, தரம் குறைந்த பழைய அரிசி ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், அதிலும் எடை குறைவாக இருப்பதாகவும் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.எனவே, நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையிலிருந்து அரவை ஆலை, கிடங்கு, போக்குவரத்து மற்றும் ரேஷன் கடை வரை நடைபெறும் ஒட்டுமொத்த விநியோக நடைமுறையையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, உணவுத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.