ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 8, 9-ல் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்; பயனாளர்களுக்கு அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 8, 9-ல் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்; பயனாளர்களுக்கு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 8, 9-ல் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்; பயனாளர்களுக்கு அறிவிப்பு

முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த செயல்முறையில் இதுவரை சுமார் 8 லட்சம் உறுப்பினர்கள் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களின் வசதிக்காக வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.எனவே, இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தங்களின் பதிவை கட்டாயம் நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்று உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.