ரூ.5 லட்சம் பணம் பறித்ததாக புகார்... பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரூ.5 லட்சம் பணம் பறித்ததாக புகார்... பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது

ரூ.5 லட்சம் பணம் பறித்ததாக புகார்... பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது

இளைஞரை மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட்டை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை வர்ஷினி வெங்கட். இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கிய அவர், பின்னர் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில், குறும்படம் தயாரிக்க முதலீடு செய்யுமாறு கூறி வர்ஷினி வெங்கட் தன்னை ஏமாற்றியதாக ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தாம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி தன்னை பேச அழைத்து தாக்கியதாகவும், அப்போது இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொலைபேசி மூலம் மிரட்டி, வங்கி பரிவர்த்தனை வாயிலாக மேலும் ரூ.5 லட்சம் பெற்றதாகவும் அந்த நபர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ரூ.27 லட்சம் கேட்டு, அந்த தொகையை வழங்காவிட்டால் பொய் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வர்ஷினி வெங்கட், சஞ்சய் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, வர்ஷினி வெங்கட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.