ரூ.30 ஆயிரம் கோடி சைபர் மோசடி: 2 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரூ.30 ஆயிரம் கோடி சைபர் மோசடி: 2 பேர் கைது

ரூ.30 ஆயிரம் கோடி சைபர் மோசடி: 2 பேர் கைது

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சைபர் மோசடியில் ரூ.2.60 கோடியை இழந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.இந்த வழக்கின் விசாரணையில், ‘டிஜிட்டல் கைது’ உள்ளிட்ட சைபர் மோசடி நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து, டிஜிட்டல் கைது மற்றும் சைபர் மோசடி தொடர்பாக மும்பையைச் சேர்ந்த பஹிம் மொயின் ஹசன் சயது, நயிம் மொயின் சயது ஆகிய 2 பேரை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.மேலும், இந்த சைபர் மோசடி கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களையும் அமலாக்கத்துறை தொடர்ந்து தேடி வருகிறது.