ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்கத்தில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என த.வெ.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்குச் சென்ற முதல்-அமைச்சர் விஜய், அங்கு பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் மதுரையில் உள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். அங்கு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ரூ.10.25 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பின்னர் அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்வையிட்ட அவர், மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மேலும், மகாத்மா காந்தி குறித்த ஆவணப்படத்தையும் அவர் பார்த்தார். இதையடுத்து அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து அருங்காட்சியகத்தின் வருகைப் பதிவேட்டில் முதல்-அமைச்சர் விஜய் தனது பெயரை பதிவு செய்தார். அருங்காட்சியகத்தை பார்வையிட்டபோது, காந்தியின் உபதேசங்களில் ஒன்றான “நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம் முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்” என்ற வாசகத்தையும் நிர்வாகி ஒருவர் முதல்-அமைச்சரிடம் காண்பித்தார்.