ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து

ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் கடந்த ஜூலை 11-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பி.டி.அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 2024-25 காலகட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 2026-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை என்றும், அரசியல் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இருதரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், கடந்த 23-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், பி.டி.அரசகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.