‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் உற்சாகமற்ற ‘புஸ்வாண’ பட்ஜெட்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் உற்சாகமற்ற ‘புஸ்வாண’ பட்ஜெட்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் உற்சாகமற்ற ‘புஸ்வாண’ பட்ஜெட்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.அந்த பதிவில், 2026ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை “ரீல்ஸ் முதலமைச்சருக்கு புரியும் வகையில்” விளக்க வேண்டுமெனில், மக்கள் எதிர்பார்த்தது “Blast Blast” என்ற நிலையில் இருந்தாலும், இறுதியில் அது “Waste Waste” என்ற ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பட்ஜெட் திராவிட மாடல் அரசின் திட்டங்களை மீண்டும் பிரதிபலிக்கும் ‘ரீமேக்’ வடிவமாகவே இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.அதேபோல், பொதுமக்களின் பார்வையில் விவசாயிகளின் பிரச்சினைகள், மின்கட்டண குழப்பம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து எந்த புதிய தீர்வோ அல்லது கவனமோ இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும், மாநில வளர்ச்சிக்குத் தேவையான நீண்டகால நோக்கமுடைய புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற முக்கிய அறிவிப்புகள் குறித்து பட்ஜெட்டில் எந்த குறிப்பும் இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இறுதியாக, சுயமாக புதிய சிந்தனைகளும் இல்லாமல், முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத, உற்சாகமற்ற ‘புஸ்வாண’ பட்ஜெட்டாகவே ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.