ரிஷப வாகனத்தின் மீது ஏறி கோபுரங்களை சுத்தம் செய்த விவகாரம்: கோவில் ஊழியர் சஸ்பெண்ட்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரிஷப வாகனத்தின் மீது ஏறி கோபுரங்களை சுத்தம் செய்த விவகாரம்: கோவில் ஊழியர் சஸ்பெண்ட்

ரிஷப வாகனத்தின் மீது ஏறி கோபுரங்களை சுத்தம் செய்த விவகாரம்: கோவில் ஊழியர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று கோபுரங்களை சுத்தம் செய்த விவகாரத்தில், கோவில் ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, இந்த ஆண்டு வரும் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவு நாளான 24-ந்தேதி அதிகாலையில் கருவறை முன்பு பரணி தீபமும், மாலையில் கோவிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. இதையொட்டி கோவிலில் திருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவிலில் உள்ள நவகோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வண்ண மின்விளக்குகள் பொருத்தும் பணியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களையும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு தலைமையிலும், திருவண்ணாமலை தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி மேற்பார்வையிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கோபுரங்களைச் சுத்தம் செய்வதற்காக தீயணைப்பு வீரர்கள், சுவாமி வீதியுலாவின்போது பயன்படுத்தப்படும் ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்றனர். இந்தச் செயல் பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் நந்தி மீது ஏறி நின்று பணிகளை மேற்கொண்டது பக்தர்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக எதிர்ப்புகள் எழுந்தன. கோபுரங்களைச் சுத்தம் செய்வது அவசியமான பணிதான் என்றாலும், அதற்காக பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்காமல் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல என்றும், இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில் பணியாளர் அசோக் என்பவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினரும் தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்து, கோவில் நிர்வாகத்திடம் மன்னிப்புக் கடிதம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.