ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற 2 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், தற்போது 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசின் சிறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால், அவர்களது குடும்பங்களின் பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் தாமதிக்காமல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், முந்தைய ஆட்சிகளில் கடிதம் எழுதுவதுடன் பணிகள் முடிந்துவிடும் என்று விமர்சித்த முதல்வர் விஜய், தற்போது அதேபோன்று கடிதம் எழுதுவதிலேயே நடவடிக்கையை நிறுத்திக் கொள்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை வர உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாக வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.‘மீனவ நண்பன்’ என்று வார்த்தைகளில் கூறுவதை விட, அதை செயல்பாட்டில் நிரூபித்து மீனவர்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.