ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் தினமும் மேற்கொள்ளப்படும் டெங்கு பரிசோதனைகளில் 10-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளுக்காக தனி வார்டு வசதி ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும், சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களும் ஒரே இடத்தில் அனுமதிக்கப்படுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.