ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீநிவாச பெருமாள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீநிவாச பெருமாள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீநிவாச பெருமாள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. ‘தென் திருப்பதி’ என பக்தர்களால் போற்றப்படும் இந்த கோவிலில், விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து, ‘கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீநிவாச பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கிரிவலம் வர உள்ளார். இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.