ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்து: பலர் காயம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
26 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்து: பலர் காயம்

ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்து: பலர் காயம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதிய விபத்தில், கட்சித் தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தார். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன், சுமார் 135 கி.மீ. தொலைவில் உள்ள சுல்தான்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது, லக்னோவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹலியாபூர் பகுதியில், பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. ராகுல் காந்தியின் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம்பெற்ற ஐந்து வாகனங்கள், அங்கு சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது மோதின. இதில் பலர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய ஐந்து வாகனங்களும் பாதுகாப்பு அணிவகுப்பின் கடைசிப் பகுதியில் வந்தவை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ராகுல் காந்திக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைவராக மத்திய அமைச்சர் அமித் ஷா இருந்தபோது, அவருக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் ஆஜராவதற்காக அவர் சுல்தான்பூருக்குச் சென்றபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.