ராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் வெளியான ‘மஹாவீர் கர்ணா’ சிறப்பு போஸ்டர்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் வெளியான ‘மஹாவீர் கர்ணா’ சிறப்பு போஸ்டர்

ராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் வெளியான ‘மஹாவீர் கர்ணா’ சிறப்பு போஸ்டர்

நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் புதிய சிறப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், தற்போது ‘காஞ்சனா 4’, ‘பென்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, மகாபாரதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கர்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். ஏற்கெனவே கர்ணன் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் இடம்பெற்ற முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை, பென் மூவீஸ் சார்பில் ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ஆர்.வி. ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. புராணக் காலத்தைத் திரையில் கொண்டுவரும் வகையில் பிரம்மாண்டமான அரங்குகள், சிறப்பான கலை வடிவமைப்பு மற்றும் நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி படத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகிறது. அடுத்த ஆண்டு திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ராகவா லாரன்ஸுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அவரது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே படத்தின் முதல் தோற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பிறந்தநாள் சிறப்பு போஸ்டரும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.