ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – 12 பேர் பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – 12 பேர் பலி

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – 12 பேர் பலி

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த நீண்டகால போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வந்து சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவின் தத்தாரிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிஸ்னேகாம்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இன்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 39 பேர் படுகாயமடைந்துள்ளனர்.