ரவி மோகனின் பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘கராத்தே பாபு’ படக்குழு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

10 Sep 2026 www.thinathulir.com

ரவி மோகனின் பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘கராத்தே பாபு’ படக்குழு

ரவி மோகனின் பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘கராத்தே பாபு’ படக்குழு

நடிகர் ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவி மோகன், ‘எம். குமரன் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘பேராண்மை’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். இதனிடையே, ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பல்வேறு வகையான கதைக்களங்களைத் தேர்வு செய்து ரவி மோகன் நடித்து வருகிறார். பேன்டஸி கதைக்களத்தில் ‘ஜீனி’, அரசியல் பின்னணியில் ‘கராத்தே பாபு’, ‘மிருதன் 2’ மற்றும் நகைச்சுவை கலந்த ‘ப்ரோ கோட்’ உள்ளிட்ட படங்கள் அவரது அடுத்தடுத்த படங்களாக உள்ளன. ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் டாவ்டி எஸ். ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் ஆவார். மேலும், இயக்குநர் பி. வாசுவின் மகன் சக்தி வாசுதேவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இதில் ரவி மோகன் ஏற்றுள்ள அரசியல்வாதி கதாபாத்திரம் கவனம் பெற்றுள்ளது. நாசர், கே.எஸ். ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, டாவ்டி எஸ். ஜிவால், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையில், ‘கராத்தே பாபு’ படத்தின் ‘ராசாதி ராசா’ பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பாடகி மீனாட்சி இளையராஜா எழுதி பாடியுள்ளார். இந்த நிலையில், ரவி மோகனின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ‘கராத்தே பாபு’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.