ராமேசுவரம் அருகே பரபரப்பு: 100-க்கும் மேற்பட்ட பனைகள் வெட்டிச்சாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ராமேசுவரம் அருகே பரபரப்பு: 100-க்கும் மேற்பட்ட பனைகள் வெட்டிச்சாய்ப்பு

ராமேசுவரம் அருகே பரபரப்பு: 100-க்கும் மேற்பட்ட பனைகள் வெட்டிச்சாய்ப்பு

ராமேசுவரம் அருகே அரசின் அனுமதியின்றி 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் நகரில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் நகரின் வெளிப்புறப் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பேய்க்கரும்பு பகுதியில் தொடங்கி ராமர் பாதம், ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு, சுடுகாட்டம்பட்டி வழியாக அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் முடிவடையும் வகையில் இந்த புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புறவழிச்சாலை அமையவுள்ள நகரின் வெளிப்புறப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரியாங்குண்டு உள்ளிட்ட சில கிராமங்களில் நிலங்களை மனைகளாகப் பிரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அரியாங்குண்டு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் வளர்ந்திருந்த 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அரசின் அனுமதியின்றி வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனை மரங்கள் நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன், கடல் அரிப்பை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்டியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.