ரஜினியின் “தர்மன்” படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

ரஜினியின் “தர்மன்” படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

ரஜினியின் “தர்மன்” படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்சன் பின்னணியில் உருவாகி வருகிறது. படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி, ரஜினிக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் வீடியோ மூலம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை அறிவித்துள்ள இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்த் மற்றும் ராஷி கன்னா இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.