ரஜினியிடம் NTR கூறியதாக இளவரசு பகிர்ந்த தகவல்! ரஜினிகாந்த் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக உள்ளார். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெய்லர் 2’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 15-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் தொடர்பான சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் NTR அவர்கள் ரஜினிகாந்திடம், “United Nation of India” என்ற பெயரில் தென்னிந்தியாவை பிரித்து, மத்தியப் பிரதேசத்தை தலைநகரமாகக் கொண்டு ஆளலாம் என்றும், சுழற்சி முறையில் பிரதமர் பதவி இருக்கலாம் என்றும் கூறியதாக இளவரசு தெரிவித்துள்ளார். மேலும், “தமிழகத்தை நீ பார்த்துக்கொள்” என NTR, ரஜினியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ரஜினிகாந்த், “இல்லை சார், எனக்கு இதில் விருப்பம் இல்லை” என பதிலளித்ததாகவும், இந்த தகவலை ரஜினிகாந்த் தன்னிடம் பகிர்ந்ததாகவும் இளவரசு தனது பேட்டியில் கூறியுள்ளார்.