ரஜினிகாந்த் வழங்கிய ஆன்மிக நூல்... மனம் திறந்து பகிர்ந்த ராஷி கண்ணா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரஜினிகாந்த் வழங்கிய ஆன்மிக நூல்... மனம் திறந்து பகிர்ந்த ராஷி கண்ணா

ரஜினிகாந்த் வழங்கிய ஆன்மிக நூல்... மனம் திறந்து பகிர்ந்த ராஷி கண்ணா

நடிகர் ரஜினிகாந்த் தற்போது, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'தர்மன்' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மருத்துவராக அவர் தோன்றும் எனக் கூறப்படும் இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, ராஷி கண்ணா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தச் சூழலில், படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துடன் ஆன்மிகம் குறித்து விரிவாக உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாக நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். அந்த உரையாடலுக்குப் பிறகு, ஆன்மிகம் சார்ந்த ஒரு புத்தகத்தை ரஜினிகாந்த் அன்பளிப்பாக வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், ரஜினிகாந்தின் எளிமையான குணமும் அனைவரிடமும் அன்புடன் பழகும் தன்மையும் தன்னை ஆழமாகக் கவர்ந்ததாக ராஷி கண்ணா பகிர்ந்துள்ளார். அவர் பரிசளித்த ஆன்மிக நூல் தனது சிந்தனை முறையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் மனப்போக்கையும் உருவாக்கியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ராஷி கண்ணாவின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. :::