ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தோனி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தோனி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தோனி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில், சென்னை அணி வீரராக இருந்த மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை ஐகோர்ட்டில் ரூ.100 கோடி மானநஷ்ட ஈடுகோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனு தொடர்பாக தோனி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு தொடர்பாக தோனியின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் சம்பத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எந்தவித தொகுப்பும் செய்யாமல் தனக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.