தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆப்ரேஷன் கங்கா’ (Operation Ganga)என பெயரிடப்பட்டுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். இந்த திரைப்படம் இதுவரை தற்காலிகமாக ‘L367’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்தது.விஷ்ணு மோகன், உன்னி முகுந்தன் நடித்த ‘மேப்பாடியான்’திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார். இதையடுத்து ‘கத இன்னுவரே’ படத்தை இயக்கிய விஷ்ணு மோகன், தற்போது மோகன்லாலை வைத்து ‘L367’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் கதை தொடர்பான முழுமையான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என விஷ்ணு மோகன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், இது வழக்கமான ராணுவ பின்னணியை மையமாகக் கொண்ட திரைப்படம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு இன்று காலை 11.11 மணிக்கு வெளியாகும் என மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முன்கூட்டியே தெரிவித்திருந்தார்.அதன்படி, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் நடிக்கும் விஷ்ணு மோகன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ஆப்ரேஷன் கங்கா’ (Operation Ganga) என பெயரிடப்பட்டுள்ளது.