மோகன்லாலின் “அதிமனோகரம்” படப்பிடிப்பு நிறைவு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

04 Sep 2026 www.thinathulir.com

மோகன்லாலின் “அதிமனோகரம்” படப்பிடிப்பு நிறைவு

மோகன்லாலின் “அதிமனோகரம்” படப்பிடிப்பு நிறைவு

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘அதிமனோகரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’, ‘துடரும்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கிய ‘ஹருதயப்பூர்வம்’ படத்தில் மோகன்லால் நடித்தார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன், சுமார் ரூ.80 கோடி வரை வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘திரிஷ்யம் 3’ திரைப்படமும் ரூ.320 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.‘துடரும்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் ‘அதிமனோகரம்’. இது மோகன்லாலின் 366-வது படமாகும்.இந்தப் படத்தில் ஐயப்ப பக்தி கொண்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். படத்தின் சில காட்சிகளை சபரிமலையில் படமாக்க தேவசம் போர்டு சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு, அதன்படி படப்பிடிப்பும் நடைபெற்றது. இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பின்னர், ஆன்மிகம் சார்ந்த திரைப்படங்களுக்கு மட்டுமே சபரிமலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும், பிற படங்களுக்கு அனுமதி இல்லை என்றும் கேரள தேவசம் போர்டு தெரிவித்தது. இதையடுத்து ‘அதிமனோகரம்’ படத்தின் சபரிமலை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.இப்படத்தில் டி.எஸ். லவ்லஜன் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.ஆஷிக்உஸ்மான்தயாரிக்கும்இப்படத்திற்குஜேக்ஸ்பிஜாய்இசையமைத்துள்ளார்.இந்நிலையில், ‘அதிமனோகரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த வீடியோவில் மோகன்லால் காவல்துறை அதிகாரிக்கான உடையில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ‘துடரும்’ படத்தைப் போன்று வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.