மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
11 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணைக்கு கிடைக்கும் நீர்வரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அவ்வப்போது அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது. அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு சற்று குறைந்ததால், அங்குள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. இதன் காரணமாக தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.தற்போது கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல்லை தொடர்ந்து வந்தடைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5,760 கனஅடியில் இருந்து 7,151 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.