மேகமலை வன ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் 118 அரசு ஊழியர்கள்: யார் யார்?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மேகமலை வன ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் 118 அரசு ஊழியர்கள்: யார் யார்?

மேகமலை வன ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் 118 அரசு ஊழியர்கள்: யார் யார்?

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளின் கீழ் 98 கிராமங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாகும். இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல தலைமுறைகளாக இப்பகுதிகளில் வசித்து வரும் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றக்கூடாது என்று 98 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், வனத்துறை தயாரித்த ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் என மொத்தம் 118 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு துறை அதிகாரிகளுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார்.மேகமலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், அதற்காக துணை ராணுவப் படையினரை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதற்கிடையே, வனத்துறை பட்டியலில் ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.பட்டியலில் இடம்பெற்றுள்ள 118 பேரில், 47 பேர் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையான சி.ஆர்.பி.எப்.பில் பணியாற்றுபவர்கள் ஆவர்.மேலும், * போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் – 19 பேர் * மின்வாரிய ஊழியர்கள் – 11 பேர் * அங்கன்வாடி மற்றும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் – 13 பேர் * கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் – 7 பேர் * வனத்துறையில் பணியாற்றுபவர்கள் – 5 பேர் * வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் – 5 பேர் * தபால், மருத்துவம், டாஸ்மாக் உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் – 8 பேர் * முன்னாள் ராணுவ வீரர்கள் – 3 பேர் என பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களில் ஒருவர் சார்பதிவாளராகவும், போலீஸ் துறையைச் சேர்ந்த ஒருவர்உளவுப்பிரிவிலும் பணியாற்றுவதாகவும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.