‘மெய்யழகன்’ இயக்குனருடன் பகத் பாசில்... டிசம்பரில் திரைக்கு வரும் படம்!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

‘மெய்யழகன்’ இயக்குனருடன் பகத் பாசில்... டிசம்பரில் திரைக்கு வரும் படம்!

‘மெய்யழகன்’ இயக்குனருடன் பகத் பாசில்... டிசம்பரில் திரைக்கு வரும் படம்!

‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் பகத் பாசில் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என நடிகர் தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில், தமிழிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், பிரேம் குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள புதிய படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னும் படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்படவில்லை.சென்னையில் நடைபெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பகத் பாசில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பிரேம் குமார் இயக்கத்தில் தான் நடித்துள்ள அடுத்த தமிழ் திரைப்படம் வரும் டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்தார்.இந்த படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிகை சிவதா நடிக்கிறார். பிரேம் குமாரின் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் கோவிந்த் வசந்தா, இப்படத்திற்கும் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் படத்தை தயாரிக்கிறார்.‘மெய்யழகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரேம் குமார் இயக்கும் திரைப்படம் என்பதும், பகத் பாசில் கதாநாயகனாக நடிப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.டிசம்பர் வெளியீட்டை பகத் பாசில் உறுதி செய்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு, டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.