மெட்ரோ ரெயிலில் பொதுமக்களுடன் பயணம் செய்த முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

29 Jul 2026 www.thinathulir.com

மெட்ரோ ரெயிலில் பொதுமக்களுடன் பயணம் செய்த முதல்-அமைச்சர் விஜய்

மெட்ரோ ரெயிலில் பொதுமக்களுடன் பயணம் செய்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தினசரி தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிகளை மேற்கொள்வதுடன், அவ்வப்போது பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை நந்தனத்தில் செயல்படும் மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். இதன்படி, இன்று தலைமைச் செயலகத்திலிருந்து கார் மூலம் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்த முதல்-அமைச்சர் விஜயை, மெட்ரோ ரெயில் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் ஏறி பொதுமக்களுடன் இணைந்து அவர் பயணம் மேற்கொண்டார்.நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கிய பிறகு, அங்குள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் பங்கேற்கிறார். தொடர்ந்து, கிண்டி கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட உள்ளார். மேலும், போரூர் – பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தொடர்பான பணிகளையும் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்யவிருக்கிறார்.