'மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அரசு ஏன் தயங்குகிறது?' - நயினார் நாகேந்திரன் கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

27 Jul 2026 www.thinathulir.com

'மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அரசு ஏன் தயங்குகிறது?' - நயினார் நாகேந்திரன் கேள்வி

'மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அரசு ஏன் தயங்குகிறது?'  - நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழகத்தில் மூடப்பட்டதாக கூறப்படும் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக கூறி வருவதாகவும், ஆனால் அந்தக் கடைகளின் முகவரிகள் மற்றும் விவரங்கள் தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், மூடப்பட்டதாக கூறப்படும் கடைகள் உண்மையில் மூடப்பட்டனவா அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனவாஎன்றகேள்விக்கும்RTIமூலம்தெளிவானபதில்கிடைக்கவில்லைஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும் அரசு இதுவரை நேரடி விளக்கம் அளிக்கவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.717 டாஸ்மாக் கடைகள் தொடர்பாக எந்த தகவலை கேட்டாலும், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகுமாறு மட்டுமே RTI பதிலளிப்பதாகவும், மாவட்ட அலுவலகங்களில் தகவல்கள் இருந்தால் அவற்றை ஒருங்கிணைத்து பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட அரசுக்கு என்ன தடையாக உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.த.வெ.க. ஆட்சியில் மூடப்பட்டதாக கூறப்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்கள், அவற்றின் முகவரிகள் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் தொடர்பான தகவல்களுடன் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.உண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சியின் தொடக்கத்தில் மக்களிடையே நல்லெண்ணம் உருவாக்கும் நோக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டதா என்ற சந்தேகங்களுக்கு முதலமைச்சர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வெறும் விளம்பரங்களாலும் பேச்சுகளாலும் இனி மக்களை ஏமாற்ற முடியாது என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.