“மூக்குத்தி அம்மன் 2” படம் பார்த்த சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது – நடிகை குஷ்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

“மூக்குத்தி அம்மன் 2” படம் பார்த்த சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது – நடிகை குஷ்பு

“மூக்குத்தி அம்மன் 2” படம் பார்த்த சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது – நடிகை குஷ்பு

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும், படத்தைப் பார்த்த சில பெண்களுக்கு சாமி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் தயாரிப்பில் குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தைப் பார்ப்பதற்காக இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் சென்னை சத்யம் திரையரங்கிற்கு வந்திருந்தனர். படம் முடிந்து வெளியே வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், படத்திற்கு குடும்பங்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறுகையில், “இந்தப் படத்தைப் பெண்களும் குழந்தைகளும் மிகவும் விரும்பிப் பார்க்கிறார்கள். படம் பார்த்த சில பெண்களுக்கு சாமி வந்துள்ளது. இதை நாங்கள் படத்திற்குக் கிடைத்த நேர்மறையான வரவேற்பாகப் பார்க்கிறோம். சுந்தர்.சி படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக மக்கள் வருவார்கள் என்று சொல்வார்கள். அதேபோன்ற வரவேற்பு இப்போதும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதிகாலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய முதல்வருக்கும், அமைச்சர் ராஜ் மோகனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைத்துறையினர் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு உள்ளது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் சாதகமான ஒன்றாக அமைந்துள்ளது. மேலும், ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் கதையளவில் எந்தவிதமான தொடர்ச்சியும் கிடையாது. முதல் பாகத்தில் நடித்த ஊர்வசி மற்றும் நயன்தாரா மட்டுமே இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளனர். மற்றபடி இரண்டு படங்களும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவை” என்று தெரிவித்தார்.