நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த டிரெய்லர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், புதிய படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படியில் நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பில் இணைந்துள்ளனர். படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி கவனம் பெற்றது. ‘ரைஸ் ஆப் மஹாசக்தி’ என்ற தலைப்பில் வெளியான அந்த டீசலில் இடம்பெற்ற பிரம்மாண்ட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.