முரசு புயல்: நவம்பர் 4-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Nov 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Nov 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முரசு புயல்: நவம்பர் 4-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

முரசு புயல்: நவம்பர் 4-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 4-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முரசு புயலின் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் புயல் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு வட தமிழகத்தில் கனமழை, பலத்த சூறைக்காற்று மற்றும் கடலில் கடும் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. அதே நேரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பதுடன், தேவையான அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். கடலில் அலைகளின் உயரம் 4 முதல் 6 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். எனவே, வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 4-ந்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அனைத்து வகையான மீன்பிடி நடவடிக்கைகளையும் முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், உயரமாக எழும் அலைகள் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோரச் சாலைகளில் கடல் நீர் தெறிக்க வாய்ப்புள்ளது. எனவே, கடற்கரை நடைபாதைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடைவெளியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.