இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் டி20 தொடரில் களம் காண உள்ளன. முதல் போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. டி20 தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.