முதல் இந்திய பந்துவீச்சாளர்... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முதல் இந்திய பந்துவீச்சாளர்... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

முதல் இந்திய பந்துவீச்சாளர்... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற புதிய மைல்கல்லை அர்ஷ்தீப் சிங் எட்டியுள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது ஆட்டம் இன்று ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதன்படி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரின் விக்கெட்டை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், சர்வதேச டி20 போட்டிகளில் தனது 150-வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன் மூலம் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில், 150 விக்கெட்டுகளைக் கடந்த மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி, வங்காளதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் இந்தச் சாதனையை எட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 200 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இதற்கிடையே, இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. தற்போது 260 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி, நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் 4-0 என முன்னிலை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.