முதல் அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்ற புஸ்ஸி ஆனந்த்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
18 Jul 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 18 Jul 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முதல் அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்ற புஸ்ஸி ஆனந்த்

முதல் அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்ற புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கட்சித் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாளை சிறப்பித்து வருகின்றனர்.மேலும், சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள புஸ்ஸி ஆனந்தின் இல்லத்திற்கும் காலை முதலே ஏராளமான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில், தனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலத்திற்காக செயல்படும் தலைவர், மக்களின் நம்பிக்கைக்குரியவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரான விஜய்யை நேரில் சந்தித்து அவரின் அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றதாக புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.