முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து கும்பாபிஷேக பிரசாதம் வழங்கிய அமைச்சர் ரமேஷ்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து கும்பாபிஷேக பிரசாதம் வழங்கிய அமைச்சர் ரமேஷ்!

முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து கும்பாபிஷேக பிரசாதம் வழங்கிய அமைச்சர் ரமேஷ்!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 17ஆம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா சிறப்பாக நடைபெற்றதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தார். அப்போது, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தின் பிரசாதத்தை அவரிடம் வழங்கினார். இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்-அமைச்சர் விஜய்யிடம் கும்பாபிஷேகப் பிரசாதம் வழங்கப்பட்டபோது, விழா சிறப்பாக நடைபெற்றதற்கு அவர் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்ததாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.