மு.க.ஸ்டாலினை சந்தித்த காவிரி விவசாய சங்க நிர்வாகிகள்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

22 Jul 2026 www.thinathulir.com

மு.க.ஸ்டாலினை சந்தித்த காவிரி விவசாய சங்க நிர்வாகிகள்

மு.க.ஸ்டாலினை சந்தித்த காவிரி விவசாய சங்க நிர்வாகிகள்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ஈரோடு பி.கே. தெய்வசிகாமணி தலைமையிலான தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர்.இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எல். பழனியப்பன், கவுரவத் தலைவர் எஸ். ராமதாஸ், பொதுச்செயலாளர் என். செந்தில்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர்.அப்போது தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் உடனிருந்தனர்.