மீண்டும் தொடங்குகிறது ‘இந்தியன் 3’ – புதிய போஸ்டரை வெளியிட்ட லைகா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மீண்டும் தொடங்குகிறது ‘இந்தியன் 3’ – புதிய போஸ்டரை வெளியிட்ட லைகா

மீண்டும் தொடங்குகிறது ‘இந்தியன் 3’ – புதிய போஸ்டரை வெளியிட்ட லைகா

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 3’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் ‘War Mode’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு படத்தின் பணிகள் மீண்டும் தீவிரமடைய உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ உருவானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், எதிர்பார்த்த அளவிலான வெற்றியையும் பெறவில்லை. அதேவேளையில், ‘இந்தியன் 2’ உடன் வெளியிடப்பட்ட ‘இந்தியன் 3’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. ‘இந்தியன் 2’ படத்தின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத சூழலில், ‘இந்தியன் 3’ படத்துக்காக மேற்கொண்டு செலவு செய்வதில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் படத்தை கைவிடும் முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. ‘இந்தியன் 3’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு சார்ந்த பல்வேறு காரணங்களால் பணிகள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ், இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் தரப்பில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ‘இந்தியன் 3’ படத்தின் பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தற்போது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘War Mode’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ‘இந்தியன் 3’ குறித்த எதிர்பார்ப்பை மீண்டும் அதிகரித்துள்ளது.இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘இந்தியன் 3’ தொடர்பான அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.