மிலாடி நபி நன்னாள் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும்: பிரதமர் மோடி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மிலாடி நபி நன்னாள் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும்: பிரதமர் மோடி

மிலாடி நபி நன்னாள் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும்: பிரதமர் மோடி

நபிகள் நாயகம் முஹம்மது அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், இந்த புனித நாள் அனைவரிடையேயும் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும், கருணை மற்றும் சமூகத்திற்கு நம்மால் முடிந்ததை திருப்பி வழங்கும் எண்ணம் எப்போதும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்."ஈத் முபாரக்! மிலாடி நபி நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாள் நம் அனைவரிடமும் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் வளர்க்கும் என்று நம்புகிறேன். கருணை மற்றும் சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் மனப்பான்மை எப்போதும் நமக்கு வழிகாட்டட்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.