மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து... அமேசான் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர் பலி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

07 Sep 2026 www.thinathulir.com

மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து... அமேசான் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர் பலி

மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து... அமேசான் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர் பலி

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் இருந்து புறப்பட்ட அமேசான் சரக்கு விமானம், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகியது. இதையடுத்து அருகில் இருந்த வாகனங்கள் மீது விமானம் மோதியதில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தின் காரணமாக மியாமி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.